போர் நிறுத்தமே நீடித்த அமைக்கான வழி : பேராயர் Shevchuk
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனில் இரஷ்யா நிகழ்த்திவரும் போரினால் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் தடைபடாது என்று உறுதிபடக் கூறியுள்ளார் உக்ரைன் நாட்டின் கிரேக்கக் கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் Sviatoslav Shevchuk.
திருப்பீடத்திற்கான போலந்து மற்றும் உக்ரைன் தூதரகங்களின் செய்தியாளர்களுடன் தனது பேராயர் இல்லத்தில் உரையாடியபோது இவ்வாறு தெரிவித்துள்ள பேராயர் Shevchuk அவர்கள், ஒவ்வொரு நாளும் போரின் சப்தகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதும், மக்களைக் கொல்வதைக் கைவிடுவதும்தான் உண்மையான மற்றும் நீடித்த அமைதிக்கான முதல் முயற்சியாக இருக்கும் என்றுரைத்துள்ள பேராயர் Shevchuk அவர்கள், உண்மையான அமைதியே போர் இல்லாத சூழலை உருவாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் முழுவதிலும் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சியைக் காணமுடியுமா, நாம் கிறிஸ்துமஸ் கீதங்களை இசைக்க முடியுமா அல்லது அமைதி காத்து அழுதுகொண்டிருக்க வேண்டுமா என்பதுதான் எல்லா மக்களும் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது என்று கூறியுள்ள பேராயர் Shevchuk அவர்கள், கண்டிப்பாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் இருக்கும், விண்ணிலிருந்து பிறக்கும் அமைதியின் அரசரின் பெருவிழாவைக் கொண்டாட நமக்கு உரிமை உள்ளது என்று தான் அவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடுங்குளிரிலும், இருளிலும் நாம் கொண்டாடும் கிறிஸ்துப் பிறப்புப் பெருவிழா, திருகுடும்பம் அனுபவித்த வேதனைகளை உணர்ந்துகொள்வதற்கு ஒரு அனுபவமாக அமையும் என்றும் கூறியுள்ள பேராயர் Shevchuk அவர்கள், புலம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் அனைவருக்கும் கடுங்குளிரைத் தாங்கிக்கொள்வது மிகப்பெரும் சவாலாக அமைதிந்துள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்