தேடுதல்

 பங்களாதேஷ் வேளாண் ஆய்வு அவையின் கலையரங்கில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி பங்களாதேஷ் வேளாண் ஆய்வு அவையின் கலையரங்கில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி 

பங்களாதேஷ் கிறிஸ்தவர்களுக்கு பிரதமர் ஹசினா நன்றி

போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்கள் 400 ஆண்டுகளுக்குமுன்னர் பங்களாதேஷில் நற்செய்தியைக் கொணர்ந்தனர். இப்போது அந்நாட்டின் 16 கோடியே 60 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 10 இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட பங்களாதேஷ் நாட்டில், சிறுபான்மையாக வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் அந்நாட்டிற்கு ஆற்றிவரும் நற்பணிகளுக்கு பிரதமர் ஷேக் ஹசினா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, தலைநகர் டாக்காவின், பங்களாதேஷ் வேளாண் ஆய்வு அவையின் கலையரங்கில் ஏறத்தாழ இருநூறு கிறிஸ்தவர்கள் கூடி அந்நாட்டு பிரதமர் ஹசினா அவர்களை இணையதள இணைப்பு வழியாகச் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது அவர், அந்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நீதி மற்றும் அமைதியை நிலைநாட்ட இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார், அவரை நான் மிகுந்த மரியாதையோடு நினைவுகூர்கிறேன் என்றுரைத்த பிரதமர் ஹசினா அவர்கள், பங்களாதேஷிலுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ நலவாழ்வு அறக்கட்டளை என்ற ஓர் அரசு அமைப்பின் ஆதரவோடு பங்களாதேஷ் அனைத்து கிறிஸ்தவ சமூக அமைப்பு நடத்திய இந்நிகழ்வில் கலந்துகொண்ட அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான டாக்கா பேராயர்     Bejoy N Cruze அவர்கள், இறைவனின் ஞானத்தால் வழிநடத்தப்பட்டு நாட்டை நன்முறையில் நடத்திச்செல்வதற்கு பிரதமருக்காக வேண்டுவோம் என்று அனைவரிடமும் கூறியுள்ளார்.

கோவிட்-19ல், பிரதமர் ஹசினா அவர்கள் அந்நிகழ்வில் நேரிடையாகப் பங்குகொள்ள இயலவில்லை. 

போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்கள்  நானூறு ஆண்டுகளுக்குமுன்னர் பங்களாதேஷில் நற்செய்தியைக் கொணர்ந்தனர். இப்போது அந்நாட்டின் 16 கோடியே 60 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 10 இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள். இவர்களில் பாதிப்பேர் கத்தோலிக்கர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2022, 12:41