தேடுதல்

சிதிலமடைந்துள்ள Kherson நகரத்திலுள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு சிதிலமடைந்துள்ள Kherson நகரத்திலுள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு  

உக்ரைனின் Kherson நகர்மீது இரஷ்யப் படையினர் தாக்குதல்

பலர் கிறிஸ்மஸ் கொண்டாடத் தொடங்கியபோது, வார இறுதியில் Kherson நகரில் நிகழ்ந்த ஏனைய இரஷ்யத் தாக்குதல்களில் ஏறத்தாழ பத்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனிலுள்ள Kherson நகர்மீது இரஷ்ய படையினர் பொதுமக்களை நோக்கி தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தியதால், தங்கள் இல்லங்களைக் காலிசெய்துவிட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பி ஓடுகின்றனர் என்று கூறியுள்ளனர் உக்ரேனிய அதிகாரிகள்.  

போரின் கொடூரத்தால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு அமைதியை அருளுமாறு இறைவேண்டல் செய்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இத்திங்களன்று அழைப்புவிடுத்துள்ள நிலையில் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

Kherson நகரத்திலுள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு மீது கூட இரஷ்யப் படைகள் எறிகணை தாக்குதல் நடத்தியதாகவும், எவ்வாறாயினும், பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அரசுத் தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.

ஏற்கனவே நிகழ்ந்துள்ள உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் கடுங்குளிரைத் தாங்க முடியாமல் துயருற்று வரும் வேளையில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த எறிகணை தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் விழாக் காலத்தில் இரஷ்யாவின் தாக்குதல்களை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சுவதாகவும் அரசுத் தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.

பலர் கிறிஸ்மஸ் கொண்டாடத் தொடங்கியபோது, ​​வார இறுதியில் Kherson நகரில் நிகழ்ந்த ஏனைய இரஷ்ய தாக்குதல்களில் ஏறத்தாழ பத்து பேர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ள நிலையில் அண்மையில் இந்த எறிகணை தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரஷ்யாவின் ஒரு பகுதியாக மாஸ்கோ அறிவித்த நான்கு பகுதிகளை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இரஷ்யா கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2022, 14:18