திருவருகைக்கால மெழுகுதிரிகள் திருவருகைக்கால மெழுகுதிரிகள்  

நேர்காணல் - மகிழ்வின் காலமாம் திருவருகைக் காலம்

காணமுடியாத கடவுள், மனித வரலாற்றில் மனிதனாக நுழைந்தார், ஒரு மனிதராக நம் நடுவே வாழ்ந்தார் என்ற மாபெரும் மறையுண்மைகளைக் கொண்டாடும் நம்மை இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தயாரிக்க அழைப்பு விடுக்கும் காலம் திருவருகைக் காலம்.
நேர்காணல் - அருள்பணி. அலெக்ஸாண்டர் மரியதாஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இறைமகனின் வருகைக்காக நம்மையேத் தயாரிக்கின்ற காலம் திருவருகைக் காலம். விழிப்போடு ஆயத்தமாய் நம் மீட்பரைச் சந்திக்க நம்மை அழைக்கின்ற எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையின் காலம். கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக நம்மைத் தயாரிக்கும் காலம். காணமுடியாத கடவுள், மனித வரலாற்றில் மனிதனாக  நுழைந்தார், ஒரு மனிதராக நம் நடுவே வாழ்ந்தார் என்ற மாபெரும் மறையுண்மைகளைக் கொண்டாடும் நம்மை இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தயாரிக்க அழைப்பு விடுக்கும் காலம் இத்திருவருகைக் காலம். இத்தகைய திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் இருக்கக்கூடிய நாம் அதனை சிறப்பான விதத்தில் கடைபிடிக்க அதுபற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர், அருள்பணி அலெக்ஸாண்டர் மரியதாஸ்.

கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி அலெக்ஸாண்டர் மரியதாஸ் அவர்கள், திருவழிபாட்டியலில் முதகலைப் பட்டத்தை உரோம் புனித ஆன்செல்ம் பல்கலைக் கழகத்திலும் மறைபரப்பியலில் முனைவர் பட்டத்தை உரோம் உர்பானோ பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு செயலராக திண்டிவனத்தில் பணியாற்றி, தற்போது வத்திக்கானில் உள்ள திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயத்தில் பணியாற்றும் முதல் தமிழ் அருள்பணியாளர் என்ற பெருமைக்குரியவர். தமிழக கத்தோலிக்க வார மாத இதழ்களில் தன்னுடைய சிந்தனைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருபவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2022, 09:40