நாட்டின் பொதுத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் : கர்தினால் Ambongo
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ மக்களுக்குத் தேர்தல்கள் எப்போதுமே நாட்டின் நிர்வாகத்தரத்தில் உண்மையான மாற்றத்தைக் கொணர்வதற்கான நம்பிக்கையின் ஆதாரமாக இருந்து வருகிறது என்று வத்திக்கான் செய்தியிடம் கூறியுள்ளார் கர்தினால் Fridolin Ambongo Besungu.
காங்கோ குடியரசில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறியுள்ள கர்தினால் Ambongo அவர்கள், புனித இரபேல் கத்தோலிக்கப் பள்ளியில் ஓட்டளிப்பதற்காகத் தனது பெயரைப் பதிவுசெய்துகொண்டதுடன், மக்கள் அனைவரும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நாட்டின் தலத் திருஅவை, எப்போதுமே குடிமை மற்றும் தேர்தல் கல்வியில் ஈடுபட்டுள்ளது என்றும், குறிப்பாக தேர்தல் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் வழியாக நல்ல தேர்தல்கள் நமது நாட்டிற்கும் நமது மக்களுக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கும்" என்றும், தலத் திருஅவை நம்புகிறது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
2023-ஆம் ஆண்டில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை காங்கோ குடியரசுக்குத் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது பற்றியும் எடுத்துரைத்துள்ள கர்தினால் Ambongo அவர்கள், மதங்களையெல்லம் கடந்த நிலையில் அனைத்து காங்கோ மக்களும் திருத்தந்தையின் வருகைக்காகக் பேராவலுடன் காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
எங்கே செல்வது என்று தெரியாமல் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கும் காங்கோ மக்களுக்குத் திருத்தந்தையின் திருப்பபயணம், எதிர்காலத்தில் நம்பிக்கையை பெறுவதற்கு ஒரு ஊக்கமாக அமையும் என்றும், எங்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தவுமே அவர் வருகை தருகின்றார் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Ambongo.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்