பாகிஸ்தானில் அமைதியாக நிகழ்ந்த கிறிஸ்துமஸ் விழா
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகெங்கினுமுள்ள கிறிஸ்தவர்களுக்கும் குறிப்பாக, பாகிஸ்தான் கிறிஸ்தவச் சகோதரர் சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்றும், அன்பு, உடன்பிறந்த உறவு, அமைதி ஆகிய இயேசு கிறிஸ்துவின் படிப்பினைகள் நமக்கு ஒளி விளக்குகளாக அமைந்துள்ளன என்றும் கூறியுள்ளார் பாகிஸ்தானின் பிரதமர் Shahbaz Sharif.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பிரதமர் Sharif அவர்கள், இந்த நாளில், அனைவரின் அமைதி மற்றும் வளமைக்காக உழைப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் புதுப்பித்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.
பிரதமரைத் தொடர்ந்து, பாகிஸ்தான்வாழ் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் தனது அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவிதித்துக் கொள்வதாக அந்நாட்டின் அரசுத் தலைவர் Dr. Arif Alvi அவர்களும் தெரிவித்துள்ளதாக CNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ள பாகிஸ்தானின் பல்வேறு அரசியல் தலைவர்களும் பாகிஸ்தானின் வளர்ச்சிக்குக் கிறிஸ்தவர்கள் வழங்கியுள்ள பங்களிப்பைப் பாராட்டியுள்ளதுடன் கிறிஸ்தவர்களும் இந்நாட்டின் ஒரு அங்கம் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளதாகவும் CNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருந்தபோதிலும், பாகிஸ்தான் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் விழாவை, டிசம்பர் 25, ஞாயிறன்று வழக்கமான முறையில், மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடியுள்ளனர். (CNA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்