தேடுதல்

ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட தயாராகும் ஆடைகள் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட தயாராகும் ஆடைகள் 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உதவும் வின்சென்ட் தே பவுல்சபை

தேவையில் இருக்கும் அனைவருக்கும் நாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம் : புனித வின்சென்ட் தே பவுல் சபை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பரிவிரக்கத்தின் கொடை என்பது முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகத் தேவைப்படுகிறது என்று இங்கிலாந்து மற்றும் வேலஸ்க்கான புனித வின்சென்ட் தே பவுல் சபை கூறியுள்ளது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா காலங்களில் தேவையில் இருப்போருக்கு உதவும் நோக்கில், நவம்பர் 23, இப்புதனன்று, பலரிடமும் உதவி கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளது அந்நாடுகளின் புனித வின்சென்ட் தே பவுல் சபை.

இந்த இக்கட்டான காலங்களில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள், அல்லது ஏற்கனவே துயரத்தின் பிடியில் தவிப்பவர்கள், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள இச்சபையின் தலைமை நிர்வாகி Elizabeth Palmer அவர்கள்,   நன்கொடைகள் வழங்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறுவதுடன், தேவையில் இருக்கும் அனைவருக்கும் நாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எங்கள் சமூகம் சார்ந்த குழுக்கள், புனித வின்சென்ட்  தே சபைச் சமூக மையங்கள் மற்றும் விற்பனைக் கூடங்கள் இந்தச் சவாலான காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும்  நல்வரவை வழங்கும் இடங்களாகவும் அமைந்துள்ளன என்றும் கூறியுள்ள Palmer அவர்கள், மக்கள் வழங்கும் நன்கொடைகள் முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானவை என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதுமுள்ள புனித வின்சென்ட் தே சபைக் குழுக்கள் மற்றும் அச்சபையின் ஆதரவு மையங்கள், வாழ்க்கையில் வேதனையின் விளிம்பில் வாழும் மக்களுக்கு  அமைதியான ஒரு தருணத்தை வழங்குகின்றன. மேலும் கற்றுக் கொள்ளவும், வளரவும், வெற்றி பெறுவதற்கான வழிகளை அறியவும் இதுவொரு சிறந்த தளமாக விளங்கி வருகின்றது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2022, 14:03