தேடுதல்

அரசுக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டம் (கோப்புப்படம்) அரசுக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டம் (கோப்புப்படம்) 

கஞ்சா உற்பத்தியை எதிர்க்கும் இலங்கையின் மதத் தலைவர்கள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை குறைப்பதற்கு கஞ்சா உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டாம் : இலங்கை உயர் மறைமாவட்ட அருள்பணியாளர்

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

சட்டங்களை அமல்படுத்தவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நாட்டிலிருந்து ஒழிக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை ஊக்குவிக்கக்கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை குறைப்பதற்கு ஏற்றுமதி வழியாக வருமானம் ஈட்டுவதற்காக கஞ்சா உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டாம் என இலங்கையிலுள்ள மதத் தலைவர்கள் அரசை வலியுறுத்தியுள்ள நிலையில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் அவ்வருள்பணியாளர்.

கஞ்சா ஒரு நன்மை பயக்கும் பொருள் என்ற கருத்து தற்போது சமூகத்தில் உருவாகி வருவதாகவும், அது உண்மையல்ல என்றும்,  வரி வருமானத்தை விட போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்தினால் ஏற்படும் அழிவுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்  என்றும் இதுகுறித்து கருத்து தெரிவித்த புத்த மத துறவி கூறியுள்ளார்.

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அரசின் முயற்சியை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அறிஞரும், ஆய்வாளரும், நன்கொடையாளருமான  Omalpe Sobitha Thera அவர்கள், பொருளாதாரம் என்ற போர்வையில் இதனை சட்டப்பூர்வமாக்கினால், கடுமையான கலாச்சார சீரழிவுகளையும் சுகாதாரக்  கேடுகளையம் உருவாகும் என்றும் அரசை எச்சரித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டிக்குமாறு அனைத்துக்  கிறிஸ்தவத் தலைவர்களுக்கும்  அண்மையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்தினால் மால்கம் ரஞ்சித். மேலும் கத்தோலிக்கத் திருஅவை மற்ற மதத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து சட்டவிரோதப் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராகக்  கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்கே, ஏற்றுமதிக்கான கஞ்சா சாகுபடியை மேற்பார்வையிட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2022, 13:08