நேர்காணல் - இயற்கையோடு நாம் கொள்ளவேண்டிய உறவு
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயற்கை இறைவன் நமக்களித்த மிகப்பெரிய பரிசு அப்பரிசின் மதிப்பை உணர்ந்து, அதனை மாண்போடும் மதிப்போடும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இயற்கையின்றி மனிதனில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டோமானால் நமது வாழ்வும் இன்பமான வாழ்வாக, அமையும். உடன்வாழும் மனிதர்களிடம் கொள்கின்ற அன்பால் உறவு வலுப்படுவது போல இயற்கையோடு நாம் கொள்கின்ற அன்பால் வாழும் பூமி வளப்படுகின்றது. இயற்கையை மதித்து வாழவும், நீடித்த நிரந்தர வளர்ச்சியைத் தொடர்ந்து பெறவும் முயற்சிப்போம். இன்றைய நாளில் இயற்கையோடு நாம் கொள்ள வேண்டிய உறவு என்னும் தலைப்பில் நம்மோடு தன்னுடையக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி ராயப்பா கசி.
வேலூர் மறைமாவட்டத்தை சேர்ந்த அருள்பணி ராயப்பா கசி, அவர்கள் இயற்கை நல ஆர்வலர், முன்னாள் நீதி மற்றும் அமைதிப்பணி திருப்பீடத்துறை சார்பில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்குகளில் மூன்று முறைத் தன்னுடையப் படைப்புக்களைப் பகிர்ந்தளித்தவர். 15 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இயற்கை மேல் தான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பிறருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருப்பவர். குறிப்பாக இறைவா உமக்கே புகழ் laudatosi என்னும் திருத்தந்தையின் திருமடலின் தமிழாக்கமாக சுற்றுச்சூழல் பெருங்காப்பியம் என்ற நூலைப் படைத்தளித்து மகிழ்ந்தவர். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இயற்கைவளம், நீடித்த நிலையான வளர்ச்சி பற்றிய தன்னுடையக் கருத்துக்களை வழங்கி வருபவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்