ஐரோப்பாவில் காலநிலை மாற்றம் குறித்த வலைதள கருத்தரங்கு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எகிப்தின் Sharm El Sheikh-இல் நவம்பர் 6ம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த COP-27 உச்சி மாநாட்டில், சுற்றுச்சூழல் நெருக்கடியில் கத்தோலிக்கர்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதற்கான தீர்வுகளை ஆராய்வதற்கு ஐரோப்பிய Laudato si கூட்டமைப்பு வலைதள கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
"சுற்றுச்சூழல்-ஆன்மிகம், சூழல்-நடைமுறை மற்றும் சுற்றுச்சூழல்-ஆதரவு என "எங்கள் பணிகள் மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன என இதுகுறித்து பேசிய இக்கூட்டமைப்பின் நிகழ்ச்சி தொகுப்பாளர் Laura Morosini, விளக்கியுள்ளார்.
பல ஆண்டுகளாகத் திருப்பீடம் ஒரு பார்வையாளர் நாடாக இருந்துள்ளது என்றும், இறுதித் தீர்மானங்கள் கையெழுத்திடப்பட்ட பிறகு தார்மீக வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான கடமைகளைக் கொண்டுள்ளது என்றும் இவ்வுச்சிமாநாடு நடைபெற்றுவரும் Sharm el-Sheik நகரிலுள்ள அருள்பணியாளர் Scarel தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் அழுகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள, இக்கூட்டமைப்பிலுள்ள அருள்பணியாளர் Chilufya, ‘இறைவா உமக்கே புகழ்’ அதாவது, Laudato si' என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது மடலை எடுத்துக்காட்டி, தொழில்மயமாக்கலின் அதிகப்படியான செயல்முறையால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வரும் வளரும் நாடுகளுக்கு நவீன சமுதாயத்தின் பொறுப்புகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடவுளின் நம்பிக்கையாளர்கள் மற்றும் சமயத் தலைவர்களாக இருக்கின்ற நாம், பல்வேறு செயல்களை மாற்றியமைப்பதற்குக் கடவுள் நமக்கு மகத்தான வலிமையைக் கொடுத்திருக்கிறார் என்ற விழிப்புணர்வில் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ள அருள்பணியாளர் Chilufya, கத்தோலிக்கர்கள் சிந்திக்க வேண்டும், முயற்சி செய்ய வேண்டும் மற்றும் புதியவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்