ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்க்காதவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் வீடுகளுக்குப் பதிலாக நெடுஞ்சாலைகளை அமைத்துக் கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றார்கள் எனவும், இத்தகையவர்களுக்கு ஓட்டளித்து நாட்டின் நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் எனவும், இலங்கை மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் மால்கம் இரஞ்சித்
நவம்பர் 7 இத்திங்களன்று இலங்கையின் நெகோம்போ பகுதியில் 2000 வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்து உதவும்படி விண்ணப்பித்து, NUPO எனப்படும் நெகோம்போ ஐக்கிய கொழும்பு மக்கள் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் தலையேற்று உரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ளார், இலங்கையின் கொழும்பு பேராயரான கர்தினால் மால்கம் இரஞ்சித்.
வீடற்ற ஏழைகளுக்கு வீடுகட்ட உதவும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம்பெறும் அதிகாரிகள் அதனை ஏழை மக்களுக்காகச் செலவளிக்காமல் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கென்று செலவு செய்கின்றார்கள் என்றும், இத்தகைய அதிகாரிகளுக்கு ஒட்டளித்தால் மக்களின் நிலைமையும் நாட்டின் நிலைமையும் அதிகமாகப் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார், கர்தினால் மால்கம்.
NUPO அமைப்பு நடத்திய 50 க்கும் மேற்பட்ட வீடற்ற மக்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், சிறப்புத்தலைவராக கலந்துகொண்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், மக்கள் தங்கள் மதிப்புமிக்க தேர்தல் வாக்குகளை, ஏழை மக்களுக்கு உதவாத அரசியல் தலைவர்களுக்கு அளித்து நாட்டின் அவல நிலைக்கு துணை நிற்கவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இலங்கையின் கொழும்பு புற நகர்ப்பகுதியில் உள்ள நெகோம்போவில் ஏறக்குறைய 2000 மக்கள் வீடின்றி 40 வருடங்களுக்கும் மேலாக சமூகப் பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாகவும், பெரும் முயற்சிகளுக்குப் பிறகு ஒரு சிலருக்கு மட்டுமே வீடுகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
வீடற்ற மக்களுக்கு வீட்டு உரிமை அளிப்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாக சேர்க்கப்படவேண்டும் என்பதே NUPO அமைப்பின் முதல் கோரிக்கை என்றும் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்