வார்சா மனித பரிமாணங்களின் 8 வது நிறையமர்வுக் கருத்தரங்கு
மெரினா ராஜ் - வத்திக்கான்
உலகின் மோதல் மற்றும் நெருக்கடியான நிலையில், நிலையற்ற சமுக அரசியல் சூழலை பயன்படுத்தி மக்களை அடிபணிய வைக்கவும் அடிமைப்படுத்தவும் சிலர் முயல்வது புதிய பிரச்சனை என்றும், மனிதர்கள் ஒவ்வொருவரும் மனித மாண்புடன் நடத்தப்படுவது மிக முக்கியமானது எனவும் வலியுறுத்தியுள்ளார் பேரருள்திரு யானுஸ் உர்பான்சிக் (JANUSZ S. URBAŃCZYK),
அக்டோபர் 6 இவ்வியாழன்று வார்சாவில் நடைபெற்ற 8வது மனித பரிமாணங்களின் நிறையமர்வுக் கருத்தரங்கில் வத்திக்கான் சார்பில் நிரந்தர பார்வையாளராக பங்கேற்ற பேரருள்திரு உர்பான்சிக் அவர்கள், திருத்தந்தை கூறுவது போல மனிதனால் உருவாக்கப்பட்ட மனித வர்த்தகம் கடவுள் விரும்பி உருவாக்கிய மனித மாண்பு, விடுதலை உணர்வு போன்றவற்றிற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
ஆண்களை விட அதிக அளவு பெண்களும் பெண் குழந்தைகளும் மனித வர்த்தகத்துக்கு ஆளாவது, சமஉரிமை மாண்பு இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும், திருத்தந்தை வலியுறுத்துவதற்கிணங்க, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை வரவேற்று உதவிகள் பல செய்வதன் வழியாக சமூகத்திற்கு நற்பலன்களைப் பெறலாம் எனவும் எடுத்துரைத்தார். பேரருள்திரு உர்பான்சிஸ்க்.
வார்சாவில் நடைபெற்ற மனித பரிமாண எட்டாவது நிறையமர்வுக் கருத்தரங்கில்,ஆயுத மோதலின் பின்னணி, மனிதாபிமான பிரச்சினைகள், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர், மனித வர்த்தகம் மனித மாண்பு போன்றவைக் குறித்து பேசப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்