ஆசிய ஆயர் பொதுப்பேரவையில் பெண் துறவறத்தார் பங்கேற்பு
செல்வராஜ் சூசை மாணிக்கம் - வத்திக்கான்
தனது பங்கேற்பு நமது ஆயர்களுக்கு, துறவறத்தார், குறிப்பாகப் பெண் துறவியர் நற்செய்தி அறிவிப்புப் பணியில் எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதை நினைவூட்டுவதாக அமையும் என்று அருள்சகோதரி ஒருவர் கூறியுள்ளார்.
பாங்காக்கில் நடைபெறும் ஆசிய ஆயர்களின் பொதுப் பேரவையில் (FABC) பங்கேற்க அழைக்கப்பட்ட பெண் துறவற சபைகளைச் சேர்ந்த அருள்சகோதரிகளில் ஒருவரான Deanna என்பவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தனது பங்கேற்பு இருபால் துறவறத்தாருக்கும் இடையே ஒரு சுமூகமான நல்உறவை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மனித கடத்தல் நடைபெறும் பகுதிகளில் பெண்துறவியர் எவ்வாறு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணி செய்கிறார்கள் என்பதையெல்லம் ஆயர்கள் நன்கு அறிவர் என்று கூறியுள்ள Talitha Kum அமைப்பைச் சார்ந்த சகோதரி Paula அவர்கள், "நாங்கள் மக்களுக்கு உதவுவதால், அவர்கள் எங்கள் குரலைக் கேட்க வேண்டும் என்றும் எங்களோடு இணைந்து செயல்படவேண்டும் மற்றும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்றும் கூறியுள்ளார்.
ஊடகத்தின் வழியாக நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நற்செய்தி பணியாற்றுகிறேன் என்பதால் நான் சிறப்பு பங்கேற்பாளராக அழைக்கப்பெற்றுள்ளேன் என்று கூறியுள்ள புனித பவுலின் புதல்வியர் சபையைச் சார்ந்த சகோதரி Joeyanna D’Souza அவர்கள், நான் இங்கு இருப்பது உண்மையில் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துவதாக உணர்கிறேன் என்றும், சமூக ஊடகங்கள் மற்றும் ஆசிய ஆயர்பேரவையின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் நோக்கில் என்னால் சிறந்த பங்களிப்பை வழங்குகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் நடைபெறும் ஆசிய ஆயர்களின் பொதுப் பேரவையில் (FABC) பங்கேற்க ஆறு பெண் துறவறத்தார் அழைப்புப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்