தேடுதல்

அலங்கரிக்கப்பட்டக் கல்லறை  அலங்கரிக்கப்பட்டக் கல்லறை  

நேர்காணல் - அனைத்து புனிதர்கள் மற்றும் அனைத்து இறந்தோர் நாள்

மனிதர்களாகப் பிறந்து தங்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் வழியாக தூய்மையாக்கி கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களைக் கழுவிப் புனிதமடைந்தவர்கள் புனிதர்கள்.
அனைத்துப் புனிதர் மற்றும் இறந்தோர் நாள் - அருள்பணி. ஜோமிக்ஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனிதர்களாகப் பிறந்து தங்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் வழியாக  தூய்மையாக்கி கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களைக் கழுவிப் புனிதமடைந்தவர்கள் புனிதர்கள். தங்களது பாவங்களாலும், குற்றங்களாலும், பலவீனத்தாலும், கடவுளுக்கு விரோதமாக நடந்து அவருடைய இரக்கத்தை பெற விரும்புபவர்கள் இறந்தோர். இத்தகைய இரு நிலையினரையும் நினைவுகூரும் நாள்களான அனைத்து புனிதர்கள் நாள் மற்றும் அனைத்து இறந்தோர் நாள் அவர்களையெல்லாம் நினைத்து மன்றாட  திருஅவை அழைக்கின்ற வேளையில் இந்நாள்கள் பற்றியக் கருத்துக்களை  இன்றைய நேர்காணல் வழியாக நம்மிடம் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி ஜோமிக்ஸ். பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்பணி ஜோ மைக்கேல் செல்வராஜ் பாளையங்கோட்டை மண்ணின் மைந்தர், கர்நாடக இசையை முறையாகக் கற்று இசைஆர்வத்துடன் பல பாடல்களை எழுதி இசை அமைத்து வெளியிட்டவர். சொற்செறிவும்  தமிழ்ப் புலமையும் உடைய அருள்பணி ஜோமிஸ் அவர்கள் விவிலிய நூல்கள் பற்றிய  விளக்கம் ஆய்வுகளைக் கற்றும் கற்பித்தவர். . ஆயர் பேரவையின்  கீழ் இயங்கும் புனித பவுல் விவிலிய நிலையத்தின் இயக்குநர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2022, 11:20