தேடுதல்

ஐரோப்பிய ஆயர் பேரவையின் 2020 ஆண்டு இலச்சினை ஐரோப்பிய ஆயர் பேரவையின் 2020 ஆண்டு இலச்சினை  

ஐரோப்பிய ஆயர்களின் இலையுதிர்கால நிறையமர்வுக் கூட்டம்

அக்டோபர் 12 ஆம் தேதி புதன் கிழமை முதல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை பெல்ஜியத்தின் பிரசெல்சில் ஐரோப்பிய ஆயர் பேரவையின் இலையுதிர்கால நிறையமர்வுக் கூட்டம் நடைபெற்றது.

மெரினா ராஜ் - வத்திகான்.

இரஷ்யா - உக்ரைன் போர் உடனடியாக  நிறுத்தப்பட, ஐரோப்பா கண்டத்தால் மேற்கொள்ளப்படும் உரையாடல்கள், அமைதி முயற்சிகள், மோதலுக்கான தீர்வை நோக்கிய செயல்பாடுகள் போன்றவற்றில்  திருஅவையோடு இணைந்து , ஐரோப்பா ஆயர் பேரவை உடன் இருந்து செயல்படும் என ஐரோப்பிய ஆயர் பேரவை பிரதி நிதிகள்  அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அக்டோபர் 12 ஆம் தேதி  புதன் கிழமை முதல்  14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் ல் நடைபெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவையின் இலையுதிர்கால நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதி நாள் அறிக்கையில் ஐரோப்பிய ஆயர் பிரதி நிதிகள்  இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளனர்.

அறிவற்ற இப்போரினால் உயிரிழந்த  மற்றும் பாதிக்கப்பட்ட ஏராளமான சகோதர சகோதரிகளை தங்களது செபத்தில் நினைவுகூர்வதாகவும், பல இலட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும்  குடிபெயர்ந்து துன்புறும் சூழலுக்கு வருத்தத்தையும் ஆன்மீக உடன் இருப்பையும்  தெரிவித்துள்ளனர்.

எரிசக்தி தட்டுப்பாடு பொருளாதார நெருக்கடி போன்றவற்றை எற்படுத்திய இப்போரிலிருந்து மீண்டு நாடுகள்  அமைதியான நிலைமைக்கு திரும்ப , உரையாடல்களை  இரு நாடுகளும் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உக்ரைனுடன் ஒற்றுமையைவெளிப்படுத்த, போரின் விளைவுகளைக் குறைக்க முடிவெடுக்கும் ஐரோப்பிய தலைவர்களின் அயராத முயற்சிகளுக்கு நன்றியையும், அவர்களோடு  ஒற்றுமையாக உறுதியாக இத்திட்டத்தில் இருக்கவும் அனைத்து மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும்  திருப்பீடத்துடன்  இணைந்து,  போரினை வழிநடத்துபவர்கள் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுகோள் விடுப்பதாகவும், இருளிலும் மரணத்தின் நிழலிலும் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒளியைக் கொடுத்து, நம் கால்களை அமைதியின் பாதையில் வழிநடத்த இறைவனிடம் வேண்டுவதாகவும் குறிப்பிட்டு அவ்வறிக்கையை ஐரோப்பிய ஆயர்கள் நிறைவு செய்திருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2022, 14:30