தேடுதல்

ஆலயத்தில் செபிக்கும் கிறிஸ்தவர்கள். ஆலயத்தில் செபிக்கும் கிறிஸ்தவர்கள்.   (ANSA)

உறுதிப்பூசுதல் பெற்ற ஒவ்வொருவரும் நற்செய்தியின் பணியாளர்கள்

தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட உறுதிப்பூசுதல் பெற்ற ஒவ்வொருவரும், சொல், செயல், சிந்தனையில் நம்பிக்கை, அன்பு போன்றவற்றை வெளிப்படுத்துபவர்களாக வாழ அழைக்கப்படுகின்றார்கள்.

மெரினா ராஜ் வத்திக்கான்.

தூய ஆவி தரும் அன்பாற்றலால் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியும் எனவும், ஒற்றுமை மற்றும் உடன் பிறந்த உணர்வால்  நிரம்பப்பெற்று கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியாளர்களாக துஜ்ய ஆவியாரால் நிரப்பப்படும் போது நாம் மாறுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். பேராயர் Bejoy N D'Cruze அவர்கள்.

அக்டோபர் 6 இவ்வியாழன்று, பங்களாதேஷில் உள்ள டாக்காவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு, மற்றும் நற்கருணை கொண்டாட்ட விழாவில் பங்கேற்ற  பேராயர்  D'Cruze அவர்கள்,  224  இளையோருக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருளடையாளத்தை வழங்கி சிறப்பித்தபோது இவ்வாறு கூறியுள்ளார். 

தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட ஒவ்வொருவரும், சொல், செயல், சிந்தனையில் நம்பிக்கை, அன்பு போன்றவற்றை வெளிப்படுத்துபவர்களாகவும், இறைநம்பிக்கையைப் பாதுகாத்து பராமரித்து,  ,கிறிஸ்துவின்  நற்செய்தியைப் பறைசாற்றும் பணியாளர்களாக மாறுகின்றோம் எனவும் எடுத்துரைத்தார்.

அதிகளவு முஸ்லிம் மதத்தவர்களைக் கொண்ட பங்களாதேஷ் நாட்டில்,16 கோடியே 50 இலட்சம் மொத்த  மக்கள் தொகையில்  கிறிஸ்தவர்கள் 0.3 விழுக்காடு மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2022, 14:38