தேடுதல்

தென்சூடான் கிராமப்பகுதிகளில் வெள்ளநீர். தென்சூடான் கிராமப்பகுதிகளில் வெள்ளநீர்.  

வெள்ளப்பாதிப்பால் துன்புறும் தென்சூடான் மக்கள்

தென் சூடானின் 18 மாநிலங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களில் மட்டும் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் -வத்திக்கான்

எதிர்பாராத வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்சூடான் மக்கள் அனைவரும் காப்பாற்றப்படவும், இத்துன்பமான சூழலை எதிர்கொள்ள தேவையான  ஆற்றலைப் பெறவும் தொடர்ந்து இறைவனிடம் வேண்டுவதாக ஆயர் மத்தேயு ரெமிஜோ ஆதம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தென் சூடானில் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான உணவுப்பஞ்சத்தை மக்கள் எதிர்கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள வெள்ள நிவாரணப்பணிகள் குறித்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் Wau மறைமாவட்டத்தின் ஆயர்,  மத்தேயு ரெமிஜோ ஆதம்.

கிராமப்பகுதிகளில் வெள்ளநீர் நுழைந்து,  உடைமைகள் அனைத்தும் இழக்கப்பட்ட  சூழலில், ஏறக்குறைய 70000க்கும் அதிகமான மக்கள், மேற்கு எக்குவத்தோரியா என்னும் மாநிலத்தில் தஞ்சமடைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ள ஆயர் ஆதம் அவர்கள், இது வரை 1  கோடியே 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இனி வரும் நாள்களில் இது 1 கோடியே 80இலட்சத்தை நெருங்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாகுறையினாலும் வெள்ளப் பாதிப்புக்களாலும் ஏராளமான மக்கள் வேறு இடங்களுக்கு தஞ்சமடைதல், உயிரிழப்பு போன்றவை அதிகரித்துவரும் சூழலில் சூடானின் வெள்ள நிவாரண விரைவு பணி அமைப்பின் தலைவர் Mohamed Hamdan Dagalo   அவர்கள், 4,00,000 மாணவர்களுக்குப்  பள்ளி உணவுத் திட்டத்தின் வழியாக உணவு கொடுக்கப்பட தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான உணவுத்திட்டத்தை நிலையான தேசிய திட்டங்களாக மாற்றவும், பாதிக்கப்பட்டக் குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், தங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வோம் என்றும் Hamdan Dagalo   அவர்கள் கூறியுள்ளார்.

நாட்டையும் நாட்டுமக்களையும் வறுமையிலிருந்து  மீட்க, பொருளாதார வாழ்வை மேம்படுத்த  நாட்டின் அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தும் Hamdan Dagalo ,   சூடான் எதிர்கொள்ளும் பெரும் அரசியல், பொருளாதார, மற்றும் சமூக சவால்களை சமாளிக்க,   சமூக ஒற்றுமை மற்றும் உடன்பிறந்த உறவுடன் செய்யப்படும் உதவிகள் தேவை என்றும்  வலியுறுத்தியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2022, 14:13