தேடுதல்

அன்னை மரியாவின் பிறப்பு அன்னை மரியாவின் பிறப்பு  

நேர்காணல்: அருள்தரும் வேளாங்கன்னி ஆரோக்ய அன்னை

திருஅவையில் இயேசு, அவரது தாய் மரியா, திருமுழுக்கு யோவான் ஆகிய மூவரது பிறப்புகளே விழாக்களாகச் சிறப்பிக்கப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

வேளாங்கன்னி ஆரோக்ய அன்னை
வேளாங்கன்னி ஆரோக்ய அன்னை

திருஅவையில் இயேசு, அவரது தாய் மரியா, அவரது பாதையை செம்மைப்படுத்த அவருக்கு முன்னோடியாக வந்த திருமுழுக்கு யோவான் ஆகிய மூவரது பிறப்புகளே விழாக்களாகச் சிறப்பிக்கப்படுகின்றன. அன்னை மரியாவின் பிறப்பு பற்றி திருவிவிலியத்தில் குறிப்பிடப்படவில்லையெனினும், புனிதர்கள் அன்னா சுவக்கின் தம்பதியர், மரியாவின் பெற்றோர் என அறிகிறோம். கடவுளின் மிகச் சிறந்த படைப்பாகிய, அழகிய ஓவியமாகிய நம் அன்னை மரியா, இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுக்க கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர். பிறப்பிலே பாவம் ஏதுமில்லாமல், களங்கமின்றி பிறந்த அன்னை மரியாவின் பிறந்த நாள் திருவிழாவை திருஅவை ஆறாம் நூற்றாண்டிலிருந்து சிறப்பித்து வருகிறது. கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள், திருஅவையின் ஆண்டை செப்டம்பரில் தொடங்குவதால் திருஅவை, இவ்விழாவை செப்டம்பர் 8ம் தேதி சிறப்பிக்கிறது. தமிழ் நாட்டில் இவ்விழா ஆரோக்ய அன்னை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கேட்டவர்க்கு கேட்டவரம் தரும் வேளாங்கன்னி ஆரோக்ய அன்னை பற்றி அருள்பணி ஆரோக்ய ஸ்டீபன் ராஜ் அவர்கள் இப்போது பேசுகிறார். இவர் தஞ்சை மறைமாவட்டம், தண்டேஸ்வரநல்லூர் பங்குப்பணியாளர் ஆவார். இவரைத் தொடர்ந்து, ஹைதராபாத் திருவாளர் ஆல்வின் ஜோசப் அவர்களும், தனது மகளுக்கு ஆரோக்ய அன்னை அற்புதமாய் குணமளித்தது குறித்து சாட்சியம் சொல்லியுள்ளார்.

அருள்தரும் வேளாங்கன்னி ஆரோக்ய அன்னை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2022, 14:59