தேடுதல்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் Liz Truss அரசி எலிசபெத்தைச் சந்திக்கின்றார் பிரித்தானியாவின் புதிய பிரதமர் Liz Truss அரசி எலிசபெத்தைச் சந்திக்கின்றார் 

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வு நெருக்கடி களையப்பட...

பிரித்தானியாவில் சிறு தொழில்கள் தொடர்ந்து நிலைபெறுவதற்கு அரசின் ஆதரவு தேவைப்படுகின்றது - கர்தினால் நிக்கோல்ஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Liz Truss அவர்கள், அந்நாட்டில் விலைவாசி உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் களைவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை தலைவர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்.

இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் என்ற முறையில், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள  கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், புதிய பிரதமர் Liz Truss அவர்களுக்கு, ஆயர்கள் சார்பாக, தன் வாழ்த்தையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

அதோடு, தற்போது உக்ரைனில் இடம்பெறும் போரால், பிரித்தானியாவில் எரிபொருளின் விலை அதிர்ச்சிதரும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், அப்பிரச்சனை களையப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் 05, இத்திங்களன்று பிரித்தானியாவின் Conservative கட்சி உறுப்பினர்கள் புLiz Truss அவர்களை, புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் கத்தோலிக்க சமுதாயங்கள் வாழும் இடங்களில் தேவையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், உண்பதற்கும், குளிரைப் போக்குவதற்கும் தேவைப்படும் எரிபொருள் இன்றி பலர் துன்புறுகின்றனர் என்றும் கர்தினாலின் அறிக்கை கூறுகின்றது.

சிறு தொழில்கள் தொடர்ந்து நிலைபெறுவதற்கு அரசின் ஆதரவு தேவைப்படுகின்றது என்றும், அவை வேலைவாய்ப்புக்கும் குடும்பங்களின் வருவாய்க்கும் உதவுகின்றன என்றும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய கத்தோலிக்கப் பள்ளிகள் தேவையில் இருக்கும் சிறாருக்கு உதவுகின்றன என்றுரைத்துள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், அந்நாட்டு கத்தோலிக்கர், தலத்திருஅவையின் பிறரன்புப் பணிகளுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2022, 15:00