தேடுதல்

உக்ரைனின் கிரேக்கக் கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை ஸ்வியாடோஸ்லவ் ஷெவ்ச்சுக் உக்ரைனின் கிரேக்கக் கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை ஸ்வியாடோஸ்லவ் ஷெவ்ச்சுக்  

மனிதமாண்பைக் கட்டியெழுப்புவதே அடிப்படை நோக்கம்: Shevchuk

கடவுளின் சாயலைத் தாங்கியுள்ள உலக உயிர்கள் அனைத்திலும் அவர் மாண்புடன் நிலைகொண்டுள்ளார் : முதுபெரும் தந்தை Sviatoslav Shevchuk.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடவுள், மனிதரை தனது சாயலிலும் உருவிலும் படைத்துள்ளதால், அடிப்படையில் மனித மாண்பும், மனித வாழ்வின் புனிதமும் போற்றி மதிக்கப்படவேண்டும் என்று, காணொளிச் செய்தி ஒன்றில் கூறியள்ளார், உக்ரைனின் கிரேக்கக் கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை ஸ்வியாடோஸ்லவ் ஷெவ்ச்சுக் Sviatoslav Shevchuk.

ஆகஸ்ட் 10, இப்புதனன்று, தன் நாட்டு மக்களுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள முதுபெரும் தந்தை Shevchuk.அவர்கள், அடிப்படையில் மனித மாண்பும், மனித வாழ்வின் புனிதமும் போற்றி மதிக்கப்படவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக  உக்ரைன் நிலம் மீண்டும் குலுங்கத் தொடங்கியுள்ளது, எதிரிகள் தொடர்ந்து உக்ரேனிய நிலங்களைத்தாக்கி வருகின்றனர் என்றும், குறிப்பாக, டான்பாஸில் எதிரிகள், கொடிய ஆயுதங்களால் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது குண்டுகளை வீசுகின்றனர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் முதுபெரும் தந்தை Shevchuk.

ஆகவே, இந்நெருக்கடியான நிலையில், உக்ரைனின் வெற்றிக்காக இறைவேண்டல் செய்ய உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் என்று கூறியுள்ள முதுபெரும் தந்தை Shevchuk அவர்கள், நாம் செலுத்தும் இந்த நன்றியின் இறைவேண்டல், கடவுளுக்கும், தாய்நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கும் செல்லட்டும், ஏனென்றால் அவர்களால்தான் நாம் இன்றுவரை உயிர்வாழ்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

ஆண்டவராகிய கடவுள் மனிதரை தனது சாயலிலும் உருவிலும் படைத்துள்ளதால், அடிப்படையில் மனித மாண்பும், மனித வாழ்வின் புனிதமும் போற்றி மதிக்கப்படவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ள முதுபெரும் தந்தை Shevchuk. அவர்கள், கடவுளின் சாயலைத் தாங்கியுள்ள உலக உயிர்கள் அனைத்திலும் அவர் மாண்புடன் நிலைகொண்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மனித உரிமைகளை மதிப்பது, ஒவ்வொரு நபரின் மாண்பைப் போற்றுவது, அவரது இனம் அல்லது நாடு, மத அல்லது அரசியல் நம்பிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மனிதமாண்பைக் கட்டியெழுப்புவது ஆகியவை நம் அனைவரின் அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் முதுபெரும் தந்தை Shevchuk

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2022, 14:27