தேடுதல்

பேராயர் Sviatoslav Shevchuk பேராயர் Sviatoslav Shevchuk  

கடவுளே அமைதியின் ஊற்றும் அடையாளமும்:பேராயர் Sviatoslav Shevchuk.

“கடவுள் மட்டுமே இந்தத் தீமையான போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” : பேராயர் Sviatoslav Shevchuk.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் நிகழ்ந்து வரும் போரின் மத்தியில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிகளை கடவுள் மட்டுமே திறக்க முடியும் என்று கூறியுள்ளார் அந்நாட்டின் கிரேக்கக் கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் Sviatoslav Shevchuk.

வத்திக்கான் செய்தி தொடர்பகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது இவ்வாறு கூறியுள்ள உக்ரைன் Kyiv-Halyč நகரின் பேராயர் Shevchuk அவர்கள், அந்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக நிகழ்ந்துவரும் இந்தப் போரானது ‘மனித இனத்திற்கு உலகளாவிய அச்சுறுத்தல்’ என்றும் வர்ணித்துள்ளார்.

இந்நேர்காணலின்போது நன்றி என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப பலமுறை எடுத்துரைத்த பேராயர் Shevchuk அவர்கள், கடந்த ஆறு மாதங்களாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் போர் குறித்து பலமுறை உலகை எச்சரித்தமைக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தன் முதல் நன்றியை சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ச்சியான குண்டுவெடிப்பு அச்சுறுத்தலின்போது  மக்களைக் கைவிடாத ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகிய அனைவருக்கும் தனது இரண்டாவது நன்றியை சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ள பேராயர் Shevchuk அவர்கள், இத்துயரமான நிலையில் புலம்பெயர்ந்து சென்ற உக்ரைன் மக்களுக்குத் தங்கள் நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் தான் நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தற்போதைய நிலை, மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள், திருத்தந்தையின் தொடர் ஆதரவு, பன்னாட்டுச் சமுதாயத்தின் இறைவேண்டல் ஆகியவைக் குறித்தும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ள பேராயர் Shevchuk அவர்கள், கடவுளே அமைதியின் ஊற்றாகவும், அடையாளமாகவும் விளங்குகிறார் என்றும் அவர் மட்டுமே இந்தத் தீமையான போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2022, 13:39