நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்சகோதரிகள் விடுதலை.
மெரினா ராஜ் - வத்திக்கான்
அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நைஜீரியா நாட்டு இயேசு மீட்பர் சபையின் நான்கு அருள்சகோதரிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் பொதுச்செயலர், அருள்சகோதரி Zita Ihedoro அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 21, ஞாயிறு காலையில், Okigwe-Umulolo பகுதியில் கடத்தப்பட்ட அருள்சகோதரிகள் நால்வரும் ஆகஸ்ட் 23 செவ்வாயன்று பத்திரமாக விடுதலை செய்யப்பட்டதாகவும், இந்த நாள் சபையினர் அனைவராலும் நினைவு கூறப்படவேண்டிய மறக்க முடியாத நாள் என்றும் அச்சபையின் பொதுச்செயலர், அருள்சகோதரி Zita Ihedoro, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில், சகோதரிகள் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் விடுதலை செய்யப்பட, நன்மையின் பக்கம் நின்று உதவியவர்கள், நேர்மறையான ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், செபித்தவர்கள் என அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், மீட்பராம் இயேசு, அவருக்கென பணியாற்ற வந்த நம்மை ஆசீர்வதித்து, குறிப்பாக துன்ப வேளையில் பராமரித்து பாதுகாப்பார் என்று கூறி அவ்வறிக்கையை நிறைவு செய்துள்ளார் அருள்சகோதரி Zita Ihedoro.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்