தேடுதல்

அதிபர் தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்  

கென்யாவில் அமைதி தழைத்தோங்கட்டும்!: பேராயர் Muheria

“கென்யா நாட்டுத் தலைவர்களே, எங்கள் ஒவ்வொருவருக்கும் உயர்ந்த கொடையாகிய அமைதியைத் தந்திடுங்கள்”: பேராயர் Anthony Muheria

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்புள்ள கென்ய மக்களே! உள்ளத்தில் அமைதியைக் கொண்டிருங்கள், நாட்டின் தலைவர்களே, உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக! காயம்பட்டுள்ள உங்களின் உள்ளங்களுக்கு அமைதியைத் தருகின்றோம் என்று Nyeri உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Anthony Muheria அவர்கள் கூறியுள்ளார்

கென்யாவின் புதிய அரசுத்தலைவராக William Ruto தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள பேராயர் Muheria அவர்கள், நாட்டிலுள்ள அனைத்து மதத் தலைவர்களையும், கத்தோலிக்கரையும் நாட்டின் அமைதிக்காக இறைவேண்டல் செய்யுமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

கென்யா நாடு முழுவதையும் ஒன்றித்திருக்கச் செய்யுங்கள் என்று நாங்கள் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம். அப்போதுதான் நாடு தொடர்ந்து செழித்து வளர முடியும் என்று கூறியுள்ள அந்நாட்டின் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் பேராயர் Jackson Ole Sapit, ஓட்டளித்தவர்கள் ஓட்டளிக்காதவர்கள் என்று வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றுங்கள் என்று நாட்டுத் தலைவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார்.

மேலும், அமைதியைப் பேணும்போது நீங்கள் உங்களை வெற்றியாளராகக் கருதுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் அமைதியில்தான் நாம் ஒன்றிணைந்து வாழவும், வளரவும் முடியும் என்று கூறியுள்ள பேராயர் பேராயர் Ole Sapit அவர்கள், இறைவன் கென்யா நாடு முழுவதையும் ஆசீர்வதிப்பாராக! என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 9, செவ்வாயன்று நடந்த கென்ய நாட்டு அரசுத்தேர்தலில் William Ruto ஏழு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அவரை எதிர்த்து நின்ற Raila Odinga  ஏழு இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றார். Ruto 50.49 விழுக்காடு வாக்குகளையும், Odinga 48.85 விழுக்காடு வாக்குகளையும் பெற்றதாக IEBC தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2022, 14:29