திருப்பலியில் பங்குபெறும் வியட்னாம் குழந்தைகள் திருப்பலியில் பங்குபெறும் வியட்னாம் குழந்தைகள்  

வியட்நாமில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரககு

டிசம்பர் 2021-இல் 23,8171 பேர் போதைப்பொருளைகளுக்கு அடிமையாகியுள்ளதாக வியட்நாம் அரசு பதிவு செய்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சட்டவிரோதப் போதைப்பொருள்களின் தீங்கான விளைவுகளைப் பற்றிய நடைமுறை அறிவைப் பெறுவதற்கும், போதைப்பொருள் முறைகேடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் இக்கருத்தரங்கு மிகவும் உதவும் என்று கூறியுள்ளார் வியட்நாம் காரித்தாஸ் அமைப்பின் தலைவரான அருள்பணியாளர் John Baptist Nguyen Van Quang 

ஜூலை 31 ஞாயிறன்று, வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள காரித்தாஸ் அமைப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பயன்பாடுகள் நிறுவனம் இரண்டும் இணைந்து, தான் ஓய் மாவட்டத்திலுள்ள தாச் பிச் பங்கிலிருக்கும் 200 கத்தோலிக்க இளையோருக்குப் போதைப்பொருள் தடுப்பு குறித்து நடத்தியுள்ள கருத்தரங்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Quang 

ஹனோயில் உள்ள காரித்தால் அமைப்பு, போதைப்பொருள் முறைகேடுகள் அதிகரித்து வரும் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் நூற்றுக்கணக்கான இளையோருக்குப் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு திறன்கள் பற்றிய அடிப்படை தகவல்களைக் கற்பிக்கும் பொருட்டு இந்தக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளாதாக யூக்கா செய்தி தெரிவித்துள்ளது.

உள்ளூர் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இந்த முதல் கருத்தரங்கின்போது, போதைப்பொருள் தொடர்பான சூழ்நிலைகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது, போதைப்பொருள் முறைகேட்டின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது போன்றவைக் குறித்துப் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளதாவும் யூக்கா செய்தி தெரிவித்துள்ளது.

வியட்நாமில் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி வருவோரில் அதிகம் இளையோர் என்றும், இதில், 60 விழுக்காடு பேர் 15 முதல் 25 வயதிற்குள் முதல் முறையாக சட்டவிரோத போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், அவர்களில் பலர் மாணவர்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2022, 15:25