தேடுதல்

இறைவேண்டல் செய்யும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  இறைவேண்டல் செய்யும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் பாகிஸ்தானின் தெய்வ நிந்தனைச்சட்டம்.

தீவிரவாத மனநிலையை வளர்த்து கும்பல் வன்முறைக்கு வழிவகுக்கும் தெய்வ நிந்தனைச் சட்டம் பாகிஸ்தானில் நடைமுறைக்கு வரக்கூடாது

மெரினா ராஜ் வத்திக்கான்

தெய்வ நிந்தனை, இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுதல் போன்ற வன்முறையற்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத உரிமை ஆர்வலர்கள் பாகிஸ்தான் அரசை விண்ணப்பித்துள்ளனர்.

அண்மையில் இலண்டலில் நடந்த மதச்சுதந்திரம் குறித்த அனைத்துலக மாநாடு, பாகிஸ்தானின் அரசின் தெய்வ நிந்தனைச் சட்டம் கிறிஸ்தவர்கள் மற்றும் அகமதியர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது எனவும், இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு முன் நீதித்துறை அதனை  மறுஆய்வு செய்யும் போது இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தெய்வ நிந்தனையை இணையதளக்குழுவில் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட, நான்கு குழந்தைகளின் தாய் ஒருவரின் வழக்கை விசாரித்த,  பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் David Alton அவர்கள், தெய்வநிந்தனை, மதம் மாறுவது போன்ற வன்முறையற்ற செயல்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது தவிர்க்கப்பட வெண்டும் என்றும், உலகின் 12 நாடுகளில் இது கடைபிடிக்கப்பட்டு வருவது வருத்தம் அளிக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

நெதர்லாந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Joël Voordewind அவர்கள் கூறுகையில் தெய்வ நிந்தனைச் சட்டம் சகிப்புத்தன்மைக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக வன்முறைச் செயல்களை ஆற்ற தீவிரவாத குழுக்களைத் தூண்டுகிறது எனவும், பாகிஸ்தானின் பிற குழுக்களிடத்தில் பாகுபாட்டையும், பெரும்பான்மை மதத்தை ஆதரித்து எவ்வாறு செயல்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதம் மாறுதல் மற்றும் தெய்வ நிந்தனை தொடர்பான உள்நாட்டு சட்டங்கள், அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின்படி தவிர்க்கப்பட வேண்டும் என்று   VOICE FOR JUSTICE அமைப்பின் தலைவர் Joseph Jansen விண்ணப்பித்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2022, 13:45