லெபனான் கிறிஸ்தவ பள்ளிகளை வலுப்படுத்துவோம்
மெரினா ராஜ் வத்திக்கான்
கடுமையான வறுமை, பரவலான ஊழல் போன்றவற்றால் லெபனான் மக்கள் பேரழிவைச் சந்திப்பதும், அங்கு வாழும் மக்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் போல துன்பமுடன் வாழ்வதும் வருத்தம் அளிப்பதாகவும் மாரனைட் வழிபாட்டுமுறை பேராயர் Charbel Abdallah தெரிவித்துள்ளார்.
துன்புறும் கிறிஸ்தவ பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கில் நிதி திரட்டும் ACS அமைப்பின் 16,000 பயனாளிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ள பேராயர் Charbel Abdallah, லெபனானில் நிலவும் இந்த இக்கட்டான சூழலிலிருந்து விடுபட மருத்துவர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள் கைவினைக்கலைஞர்கள், இளைஞர்கள் போன்றோர் முயற்சிப்பதாகவும், மருத்துவ செலவு மின்சாரம் எரிவாய் போன்றவற்றிற்கு பணம் செலுத்த முடியாத நிலைமையினால் மக்கள் இறப்பை எதிர்நோக்கியவர்களாக வாழ்வதாகவும் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையிலிருந்து மக்கள் வெளிவர கிறிஸ்தவ பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கில் திரட்டப்படும் நிதியானது, தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வியும், துன்புறும் 1280 ஆசிரியர்களுக்கு 50 டாலர் ஊதியத்துடன் கூடிய சம்பளமும் வழங்கப்படுவதுடன், கற்பித்தலின் அளவும் உயர்த்தப்பட வழிவகுக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த பணிகள் தற்போது பெண் துறவற சபைகளான குழந்தை இயேசுவின் புனித தெரசாள் சபை, புனித அந்தோணியார் சபை, திருக்குடும்ப சபை, பிறரன்பு புதல்வியர் சபை, அமல அன்னை சபை ஆகியோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் பேராயர் Abdallah தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்