தேடுதல்

கருக்கலைப்புக்கு எதிர்ப்பு கருக்கலைப்புக்கு எதிர்ப்பு 

EU அரசியலமைப்பில் கருக்கலைப்பு இணைப்புக்கு ஆயர்கள் எதிர்ப்பு

அமெரிக்க ஐக்கிய நாட்டு கருக்கலைப்பு விவாதத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் இணையக்கூடாது - ஐரோப்பிய ஒன்றிய ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டு கருக்கலைப்பு விவாதத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் இணையக் கூடாது என்று, EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக்கொண்டுள்ள அப்பகுதியின் ஆயர்கள், இவ்விவகாரம் அப்பாராளுமன்றத்தின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

EU நாடுகள், ஐரோப்பியர்களுக்குள் ஒற்றுமையை அதிகமாக வளர்ப்பதற்காக, பணியாற்றுமாறு வலியுறுத்திக் கூறியுள்ள அந்நாடுகளின் ஆயர்கள், ஜூலை 7, இவ்வியாழனன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கருக்கலைப்பு குறித்து கொணரப்பட்ட புதிய தீர்மானம் குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இத்தீர்மானம் குறித்து COMECE எனப்படும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, ஜூலை 08, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளுக்குள் உயர்தர கருத்தியல் தடைகளை உருவாக்காமல், ஒற்றுமைக்காக அதிகமாகப் பாடுபடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

EUவின் சனநாயக விவகாரத்தில், அல்லது, EU நாடுகளைச் சாராதவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று, ஐரோப்பிய பாராளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், பேச்சு சுதந்திரம், மனச்சான்று மற்றும், மத சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கூட்டம் நடத்தும் சுதந்திரம் போன்றவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்தை வருவிக்கும் கூறுகளை, அதன் தீவிர அரசியல் கொள்கையில் ஊக்குவிப்பது குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் கருக்கலைப்பை இணைத்திருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஆயர்கள், இது நாடுகளின் சீர்திருத்தத்திற்கு ஆபத்தாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2022, 15:17