தேடுதல்

திருத்தந்தையின் உதவித்தொகைகள் இஸ்லாம் மதத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுதல் திருத்தந்தையின் உதவித்தொகைகள் இஸ்லாம் மதத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுதல் 

சிரியாவில் தொடரும் மனிதாபிமான பேரழிவு

மதநம்பிக்கைகளுக்காகவும் வறுமையினாலும் துன்புறும் சிரியா கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு எச்சரிக்கை விடுத்த தலத்திருஅவை

மெரினா ராஜ் - வத்திக்கான்

மத்தியக் கிழக்குப் பகுதியில் திருத்தந்தையின் பெயரால் அளிக்கப்படும் உதவித்தொகைகள் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி இஸ்லாம் மதத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக தலத்திருஅவை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மதம் மற்றும் நம்பிக்கையின் விடுதலை என்ற தலைப்பின் கீழ் இங்கிலாந்தின் போர்ட்குலிஸ் இல்லத்தில் ஜூலை 5 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய கூட்டத்தில் பங்கேற்ற ஈராக்கின் எர்பில் பேராயர் பஷார் வர்தா மற்றும் சிரியா அலெப்போவைச் சேர்ந்த அருள்சகோதரி ஆனி டெமெர்ஜியன், கிறிஸ்தவ நம்பிக்கையினாலும் வறுமையினாலும் இன்றும் பல்வேறு மக்கள் சிரியாவில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள்.

சிரியாவில் போர் நடந்போது இருந்த சூழலைவிட இப்போது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும். 90 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றிருப்பதாகவும் கூறிய அருள்சகோதரி ஆனி டெமெர்ஜியன் அவர்கள், மனிதாபிமானப் பேரழிவுகளை சிரியா சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் உலகத்தாராலும் தொடர்பு ஊடகத்தாராலும் இன்னும் அதிகமாக அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் இளம் குழந்தைகள் கண் முன்னே நடக்கும் கொடுமையான வன்முறைகள் அவர்களது எதிர்கால வாழ்வை மிகவும் பாதிப்பதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் அடையாளமாக சிரியா இன்றும் செயல்படுகின்றது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார் அருள் சகோதரி டெமெர்ஜியன்.  

இன்றும் பல இடங்களில் 40க்கும் அதிகமான மோதல்கள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் இதனை எதிர்கொள்ள நாம் ஒவ்வொருவரும் தயாராக இருக்கவேண்டும் என்றும் உரையாற்றிய இங்கிலாந்து ஆயர் William Kenney அவர்கள், பெருந்தொற்று காலத்தில் நம்முடைய கதவுகள் அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலமாக மனிதாபிமானப் பேரழிவினின்று நாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2022, 15:01