தேடுதல்

இறைவழிபாட்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இறைவழிபாட்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  

பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவர் தொடர்பான விளம்பரங்களில் மாற்றம்

சிறுபான்மை மதத்தவரைக் குறிவைத்து வெளியிடப்படும் கீழ்த்தரமான வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பாகிஸ்தான் அரசு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பொதுப் பணிகள் மற்றும் நிர்வாகத் துறை வேலைகளுக்கான பொது விளம்பரங்களில் பணியாளர்களின் மதத்தைக் குறிப்பிடுவதை, பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளதை வரவேற்றுள்ளார், அந்நாட்டு சமூக நீதிக்கான மையத்தின் தலைவர் பீட்டர் ஜேக்கப்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NCHR) வேண்டுகோளைத் தொடர்ந்து, வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, மதச்சிறுபான்மையினருக்கு ஒரு நல்ல செய்தி என்றும், இது பல்வேறு வழிகளில் வேற்றுமைகளைக் களைவதற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஜேக்கப் மேலும் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக, பாகிஸ்தானிய குடிமைச் சமூக அமைப்புகள், துப்புரவு மற்றும் "முஸ்லிம் அல்லாத" பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிற சிறிய வேலைகளுக்காகப்  பணியமர்த்தப்பட்ட மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து வேலைவாய்ப்பு விளம்பரங்களை விமர்சித்து வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில், தெருக்கள், சாக்கடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்களைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களில், 95 விழுக்காட்டினர் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2022, 15:05