இனியது இயற்கை - மலாவி ஏரி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மலாவி ஏரி, ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள மலாவி, மொசாம்பிக், டன்சானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. மலாவி ஏரி, டான்சானியாவில் நயாசா ஏரி என்றும், மொசாம்பிக்கில் லாகோ நியாசா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகின் ஒன்பதாவது பெரிய ஏரி மற்றும் ஆப்ரிக்காவின் மூன்றாவது பெரிய, மற்றும் இரண்டாவது ஆழமான ஏரியாகும். இந்த ஏரியே உலகின் வேறெந்த ஏரியைக் காட்டிலும் அதிக மீன் வகைகளைக் கொண்டது. புகழ் பெற்ற பயணியும், மறைப்போதகருமான ஸ்காட்லாந்தின் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இப்பகுதிக்குச் சென்றிருந்ததன் காரணமாக, ஆங்கிலம் பேசுபவர்கள் சில சமயங்களில் இதை லிவிங்ஸ்டன் ஏரி எனவும் அழைத்தனர்.
மலாவி ஏரி, 560 முதல் 579 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த மேற்பரப்பு அளவு 29,600 சதுர கி.மீ. ஆகும். இதனுள் பாயும் பெரிய ஆறு ருகுகு ஆறு ஆகும். சம்பேசி ஆற்றின் துணை நதியான ஷயர் ஆற்றினூடாக இதிலிருந்து நீர் வெளியேறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்