தேடுதல்

அசாமில் வெள்ள பாதிப்பு அசாமில் வெள்ள பாதிப்பு  

அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டுகோள்!

"இனம், கலாச்சாரம், மதம் கடந்த நிலையில் பேரழிவு தரும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிட வேண்டும்”: பேராயர் John Moolachira.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு  மாநிலமான அசாமைத் தாக்கிய கடும் வெள்ளத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவுவது அவசரம் என்று கவுகாத்தி உயர் மறைமாவட்டத்தின் பேராயர் John Moolachira அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

மழை வெள்ளம் மக்களிடையே குழப்பத்தையும், கடும் சிரமங்களையும்  உருவாக்கியுள்ளபோதிலும், கத்தோலிக்கத் திருஅவை இத்தகைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் துணை நிற்கிறது என்று கூறியுள்ளார் பேராயர் John Moolachira.

மேலும், இனம், கலாச்சாரம், மதம் பாராமல், பேரழிவு தரும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முடிந்தவரை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் John Moolachira.

கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பூட்டானின் Kurisho அணை திறக்கப்பட்டதால் மக்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஏறத்தாழ 1,150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், தெரிவித்துள்ளார் கவுகாத்தி உயர் மறைமாவட்ட பல்நோக்கு சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி Maya Martin.

இப்பெருவெள்ளத்தால் ஏறத்தாழ 47 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 23 இலட்சம் மக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள 810 மீட்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், 83 பேர் இறந்துள்ளனர் என்றும் fides செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2022, 15:01