புனித பவுல் துறவு சபை : அருள்பணி டேவிட் பெர்க்மான்ஸ்
மேரி தெரேசா: வத்திக்கான்
புனித பவுல் துறவு சபை, இத்தாலியின் Piedmont பகுதியில், ஆல்பா எனுமிடத்தில், 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, அருளாளர் ஜாக்கோமோ ஆல்பெரியோனே அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சபை, 1949ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி திருப்பீடத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கென்று இவர் நான்கு சபைகளையும், பல பொதுநிலையினர் அமைப்புக்களையும் துவக்கினார். இச்சபையினர், சமூகத்தொடர்பு சாதனங்கள் மற்றும், தொழில்நுட்பங்கள் வழியாக, கிறிஸ்தவ நற்செய்தியை பரப்பி வருகின்றனர். ஜாக்கோமோ ஆல்பெரியோனே அவர்களை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி அருளாளராக அறிவித்தார். புனித பவுல் துறவு சபை, இத்தாலியின் அரிச்சா நகரில் தன் பொதுப் பேரவையை, இவ்வாண்டு மே மாதம் 29ம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது. அதில் அருள்பணி டேவிட் பெர்க்கமான்ஸ் அவர்கள், பிரதிநிதியாகப் பங்குகொள்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் மறைப்பணியாற்றிவரும் இவர் புனித பவுல் சபை பற்றியும், பொதுப் பேரவை பற்றியும் இப்போது விவரிக்கிறார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்