தேடுதல்

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட்  

நேர்காணல்: இந்திய தேசிய அருங்கொடை இயக்கம்

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், இந்தியாவின் தேசிய அருங்கொடை இயக்கத்தின் ஆயர் ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார்

மேரி தெரேசா: வத்திக்கான்

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்தவர். இவர், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர், 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 13 ஆண்டுகள் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2022ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, நியமித்தார். பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம். 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. பேராயர் கலிஸ்ட் அவர்கள், இந்தியாவின் தேசிய அருங்கொடை இயக்கத்தின் ஆயர் ஆலோசகராகவும் உள்ளார். பேராயர் கலிஸ்ட் அவர்கள், இந்திய தேசிய அருங்கொடை இயக்கம் பற்றிப் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்.

இந்திய தேசிய அருங்கொடை இயக்கம்–பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2022, 15:23