தேடுதல்

புனித இலொயோலா இஞ்ஞாசியார் புனித இலொயோலா இஞ்ஞாசியார்  

தாலிபான் பிடியில் எனது இனிகோ ஆன்மீகம்: அ.பணி பிரேம்குமார் சே.ச

இயேசு சபை அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்கள், ஆப்கானிஸ்தானில் 2014ம் ஆண்டில் தாலிபான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு, எட்டு மாதங்கள் பிணையலில் இருந்தவர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்கள், ஆப்கானிஸ்தானில் இயேசு சபையினரின் அரசு-சாரா சமூகநல மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, தாலிபான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு, எட்டு மாதங்கள் பிணையலில் இருந்தவர். இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கையில் சமூகநலப் பணிகள் ஆற்றிவருகிறார். இயேசு சபையைத் தொடங்கிய புனித இலொயோலா இஞ்ஞாசியார் மனம்மாறியதன் 500ம் ஆண்டு நிறைவை உலகளாவிய இயேசு சபையினர் சிறப்பித்து வருகின்றனர். அந்நிகழ்வையொட்டி, அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்கள், தாலிபான்கள் பிடியில் இருந்தபோது மனஉறுதியுடன் வாழ, இனிகோ என்றழைக்கப்படும் இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பயிற்சிகள் தனக்கு உதவியது குறித்து, மதுரை இலொயோலா வெப் டிவியில் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தப் பகிர்வை இன்று வழங்குகிறோம்

தாலிபான் பிடியில் எனது இனிகோ ஆன்மீகம்: அருள்பணி பிரேம்குமார் சே.ச

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2022, 15:35