தேடுதல்

கிழக்கு திமோரின் திருப்பீடத்திற்கான பிரதிநிதி Rodrigues Barreto de Ataide Goncalves திருத்தந்தையுடன் (2020.08.28) கிழக்கு திமோரின் திருப்பீடத்திற்கான பிரதிநிதி Rodrigues Barreto de Ataide Goncalves திருத்தந்தையுடன் (2020.08.28) 

கிழக்குத் திமோரில் புதுப்பிக்கப்பட்ட திருஅவைக்கான நிதி ஒப்பந்தம்

“பல்வேறு கல்வி மற்றும் சுகாதார சேவைகளில், ஏழைகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் பின்தங்கியவர்களுக்கு, மிகுந்த கனிவன்புடன் ஆதரவளிப்பதில் நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பைக் கண்டு மகிழ்கிறேன்” : பிரதமர் Taur Matan Ruak

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிழக்குத் திமோர் நாட்டில் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் குழந்தைகளுக்கான சமூக உதவி உட்பட அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்று அந்நாட்டு .ஆயர் பேரவையின்  துணைத் தலைவரான பேராயர் Virgílio do Carmo da Silva கூறியுள்ளார்.

மே 17, இச்செவ்வாயன்று அந்நாட்டின் பிரதமர் Taur Matan Ruak  மற்றும் ஆயர்பேரவையின் தலைவர் Norberto do Amaral ஆகியோர் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களுடன் பேராயர் Virgílio do Carmo da Silva, நிதியமைச்சர் Rui Augusto Gomes மற்றும் உள்துறை அமைச்சர்கள் பலரும் உடனிருந்தனர்.

இம்மாதம் மே 20ம் தேதி இந்நாட்டின் சுதந்திரம் மீளமைக்கப்பட்டதன் 20ம்  ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட நாடு தயாராகி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின்  பிரதமர் ருவாக். 

கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்நாடு, 2015ம் ஆண்டு நற்செய்தி அறிவிப்புப் பணியின் நூற்றாண்டினைக் கொண்டாடியபோது, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் மேற்கொண்ட பயணத்தில், ​​திருப்பீடத்திற்கும் கிழக்குத் திமோருக்கும் இடையே கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தை இந்தப் புதிய ஒப்பந்தம் கொண்டுள்ளது.

கிழக்குத் திமோரில் உள்ள 13 இலட்ச மக்களில் 97 விழுக்காடு மக்கள் கத்தோலிக்கர்களாக உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2022, 15:08