பல்சுவை – புனிதர் தேவசகாயம்
மேரி தெரேசா&கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்முனைவர் ஜான் குழந்தை அவர்கள், மறைசாட்சி தேவசகாயம் அவர்களைப் புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உதவிய திருப்பணிகளை இந்தியாவில் பெருமளவில் ஆற்றியவர். திருமதி ஹேமா வினிபிர்ட் என்ற கணனி ஆசிரியர், புனிதர் தேவசகாயம் அவர்களின் பரிந்துரையால் அடைந்த புதுமை பற்றி ஏற்கனவே இவர் வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அருள்முனைவர் ஜான் குழந்தை அவர்கள், இப்புனிதர்பட்ட நிகழ்வை நினைத்தபோது தன்னில் ஏற்பட்ட உள்ளத்து உணர்வுகள் குறித்து இப்போது பேசுகிறார். இவர் வத்திக்கானில் நடைபெற்ற புனிதர்பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டவர். மேலும், புனிதர்பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட திருவாளர் சின்ன ராசா அவர்களும் வத்திக்கான் வானொலியில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். இவர் கனடாவில் வாழ்கின்ற யாழ்ப்பாண தமிழர் மற்றும், கனடா தூதன் என்ற இதழின் ஆசிரியர் ஆவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்