அருளாளர் தேவசகாயம் புனிதர்பட்ட திருப்பணிகள் - 1 – ஆயர் நசரேன்
மேரி தெரேசா: வத்திக்கான்
அருளாளர் தேவசகாயம் அவர்கள், 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி, கன்னியா குமரி மாவட்டம், குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த நட்டாலம் என்ற ஊரில் பிறந்தவர். இவர், கிறிஸ்தவ நம்பிக்கைக்காக 1752ம் ஆண்டு சனவரி 14ம் தேதி கொலைசெய்யப்பட்டார். மே 15, வருகிற ஞாயிறன்று, புனிதராக அறிவிக்கப்படவுள்ள இவர், இந்தியாவின் முதல் பொதுநிலைப் புனிதராகவும், தமிழகத்தின் முதல் புனிதராகவும் சிறப்புப் பெறுகிறார். வத்திக்கானில் நடைபெறவிருக்கும் இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கு உரோம் நகர் வந்திருக்கும் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு வருகைதந்து இத்திருப்பணிகள் பற்றி விளக்குகிறார்.
அருளாளர் தேவசகாயம் அவர்களின் புனிதர் பட்ட திருப்பணிகள் பற்றி, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்கள் பகிர்ந்துகொண்ட விவரங்களின் தொடர்ச்சி, மே 12, வருகிற வியாழன் மாலை ஒலிபரப்பில் இடம்பெறும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்