தேடுதல்

கீவ் நகரிலுள்ள கல்லறைகள் கீவ் நகரிலுள்ள கல்லறைகள்   (ANSA)

உக்ரைனின் கீவில் மதத் தலைவர்களின் அமைதிக்கான பயணம்

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்த நிலையில், மனதளவில் காயம்பட்டுள்ள ஐரோப்பிய மக்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் : இத்தாலிய இஸ்லாமிய தலைவர் Imam Yahya Pallavicini

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனின் அமைதிக்காகவும் நீதிக்காகவும் செபிக்கவேண்டும் என்பதைத்தவிர என் இதயத்தில் வேறு பெரிய செபம் எதுவும் இல்லை என்று உக்ரைனின் கீவ் நகருக்குச் சென்றுள்ள ஆங்கிலிகன் ஆயர் Jo Bailey Wells கூறியுள்ளார்.

​​மே 24, இச்செவ்வாயன்று கத்தோலிக்கத் திருஅவை உட்பட 12க்கும் மேற்பட்ட முக்கிய உலக மதங்களைச் சேர்ந்த தலைவர்கள், அமைதிக்காக ஒன்றிணைந்து செபிக்கவும்,   மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அரசியல் தலைவர்களைச் சந்திக்கவும் உக்ரைனின் கீவ் நகருக்கு மூன்று நாள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

மே 24, இச்செவ்வாய்க்கிழமை காலை, இரண்டாம் உலகப் போரின்போது நாத்சி படைகளால் படுகொலை செய்யப்பட்ட Babyn Yar என்னுமிடத்தில் பொது இறைவழிபாட்டை நடத்திய இத்தலைவர்கள், அதைத் தொடர்ந்து மே 25, இப்புதன்கிழமை நண்பகலில் கீவ் நகரில் மற்றொரு இறைவேண்டல் கூட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

உக்ரேனிய நகரங்கள் மீது குண்டுவீச்சு நிறுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதற்காகவும், மனிதாபிமான வழிகளை மேம்படுத்துவதில் தங்களின் பங்களிப்பை இன்னும் அதிகரிக்கவே அங்கு வந்துள்ளதாகவும் இப்பயணத்தை வழிநடத்தும் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர். Mateusz Piotrowski அவர்கள் தெரிவித்துள்ளார.

அட்டுழியங்களை அழித்தொழிப்பதிலும், உடன்பிறந்த உணர்வுநிலையைக் கட்டியெழுப்புவதிலும், தாழ்ச்சிநிறை பணிகள் வழியாக அனைவரும் நீதிக்கான தாகத்தைத் தணித்துக்கொள்ளவேண்டும் என்று இப்பயணத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் ஒருவரான Imam Yahya Pallavicini எடுத்துரைத்தார்.

கடந்த மார்ச் மாதம், உலக ஆன்மிகத் தலைவர்களை அப்போது இரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட உக்ரேனிய தலைநகருக்குச் சென்று அதன் மக்களுடன் தங்கள் இணக்கத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்ட கீவ் நகரின் மேயர் Vitali Klitschkoன் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2022, 14:18