தேடுதல்

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர்கள்  

ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசுத்தலைவர் தேவை

பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு, சீனாவிலிருந்து எமது சுதந்திரத்தைக் காக்கும் உறுதியான தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அந்நாட்டின் நிலப்பரப்பை, குறிப்பாக, மேற்கு பிலிப்பீன்ஸ் கடலை சீன மக்கள் குடியரசிடமிருந்து காக்கவேண்டும் - ஆயர் Pabillo

மேரி தெரேசா: வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டு மக்கள், அந்நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ள ஒருவரை அல்ல, மாறாக,  ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் வருகிற மே மாதம் 9ம் தேதி அரசுத்தலைவர் மற்றும் பல நகராட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதையொட்டி, அந்நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த ஆயர் Broderick Pabillo அவர்கள், நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பெரும் சுமையாய் உள்ளன என்று கூறினார்.

நாம் அனைவரும் ஒருவர் ஒருவரோடு தொடர்புகொண்டுள்ளதையும், ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால்மட்டுமே அனைவரும் பாதுகாப்பாக இருக்கமுடியும்  என்பதையும் பெருந்தொற்று பரவல் உணர்த்தியுள்ளது என்றுரைத்தார், ஆயர் Pabillo.

பெருந்தொற்று காலத்தில், நலவாழ்வுத் துறை, அரசுத்தலைவர் துத்தெர்த்தே அவர்களால் பாதுகாக்கப்படும் மருந்து நிறுவனம் ஆகியவற்றில் ஊழல் இருந்ததையும் கேள்விப்பட்டோம் என்றுரைத்த ஆயர் Pabillo அவர்கள், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் தூக்குத்தண்டனைகள், நீதி விசாரணக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

வெளிநாட்டுக் கடனுக்குக் காரணமான அளவுகடந்த ஊழலை எதிர்கொள்ளப்படும் இவ்வேளையில், நாடு அமெரிக்கர்களின் கைகளில் விழுந்துவிடாமல், சீனாவிலிருந்து எமது சுதந்திரத்தைக் காக்கும் உறுதியான தலைமைத்துவம் தேவைப்படுகிறது என்றும், எமது நிலப்பரப்பை, குறிப்பாக, மேற்கு பிலிப்பீன்ஸ் கடலை சீன மக்கள் குடியரசிடமிருந்து காக்கவேண்டும் என்றும், ஆயர் Pabillo அவர்கள் கருத்து தெரிவித்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2022, 15:28