நேர்காணல்: போரை நிறுத்துங்கள், சாமானியரின் குரல்
மேரி தெரேசா: வத்திக்கான்
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, உக்ரைன் மீது இரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் பகுதியில் பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டு, அங்கிருந்து விலகியுள்ள இரஷ்யப் படைகள், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கடும் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இரஷ்யாவின் தாக்குதல்களால், உக்ரைனிலிருந்து இதுவரை நாற்பது இலட்சம் பேர் அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 90 விழுக்காட்டினர் பெண்கள், மற்றும், சிறார். இவர்கள் தவிர அறுபது இலட்சம் பேர், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. புலம்பெயர்ந்தோர் ஆணையம் தெரிவித்துள்ளது. புச்சா நகர்த் தெருக்களில் கிடக்கும் மனித உடல்கள், ஒட்டுமொத்த உலகின் இதயத்தையே நொறுக்கியுள்ளன. இச்சூழலில், திருமதி அமலி எட்வர்ட் அவர்கள், மனிதநேய மடல் வடிவில், போரை நிறுத்துங்கள் என்று உலகத் தலைவர்களுக்கு விண்ணப்பிக்கிறார். இவர் மதுரையில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்