தேடுதல்

அருளாளர் தேவசகாயம் அருளாளர் தேவசகாயம்  

நேர்காணல்: அருளாளர் தேவசகாயம் புனிதர்பட்ட முன்தாயரிப்பு பகுதி2

வருகிற மே மாதம் 15ம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், இந்தியாவின் முதல் மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்கள் உட்பட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

வருகிற மே மாதம் 15ம் தேதி ஞாயிறன்று, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், இந்தியாவின் முதல் மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்கள் உட்பட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளனர். அந்நிகழ்வை முன்னிட்டு, கோட்டாறு மறைமாவட்டத்தின் அருள்முனைவர் ஜான் குழந்தை அவர்களை, அம்மறைமாவட்டத்தின் அருள்பணி ஜெயக்கொடி அவர்கள் கண்ட நீண்டதொரு பேட்டியின் முதல் பகுதியைக் கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். அதைத் தொடர்ந்து, இன்று மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் பற்றிய ஆவண விவரங்களை, அருள்முனைவர் ஜான் குழந்தை அவர்கள் இன்று விளக்குகிறார்.

அருளாளர் தேவசகாயம் புனிதர்பட்ட முன்தாயரிப்பு பகுதி2

அருள்பணி முனைவர் ஜான் குழந்தை அவர்கள், இப்புனிதர்பட்டத் திருப்பணிகளை முன்னெடுத்துச் செய்து வருபவர், மற்றும், அம்மறைசாட்சி பற்றிய ஏராளமான தகவல்களைச் சேகரித்திருப்பவர். கோட்டாறு மறைமாவட்டத்தின் முன்னாள் குருகுல முதல்வராகிய அருள்பணி ஜான் குழந்தை அவர்கள், திருச்சி புனித பவுல் குருத்துவ கல்லூரியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் பல குருத்துவ மாணவர்களை உருவாக்கியிருப்பவர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 April 2022, 15:20