தேடுதல்

புலம்பெயரும் உக்ரைன் மக்கள் புலம்பெயரும் உக்ரைன் மக்கள்  

உக்ரைனிலும், உலகிலும் மனித வர்த்தகம் தடைசெய்யப்பட..

உக்ரைன் மக்களை வரவேற்கும் நாடுகளில், அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை - அரசு-சாரா அமைப்புகள் எச்சரிக்கை

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போருக்குப் பலியாகும் மக்களுக்காகவும், அந்நாட்டில் அமைதி நிலவவும் செபிப்பதாகக் கூறியுள்ள அர்ஜென்டீனா நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், உக்ரைன் மற்றும், அந்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித வர்த்தகம் தடைசெய்யப்பட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அர்ஜென்டீனா நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதிப் பணிக்குழுவும், மனித வர்த்தகத்திற்கு எதிரான குழுவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனிலும், உலகெங்கிலும், மனித வர்த்தகம் என்ற குற்றம் தடைசெய்யப்படவேண்டும், இந்த வர்த்தகத்திலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது..     

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், பெண்கள் மற்றும், சிறாரை, மனித வர்த்தகத்திற்குப் பலிகடாக்களாக்கும் ஆபத்தை முன்வைக்கின்றது என்றும், அப்போரால் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்திருப்பது, அப்பகுதியின் தலைவர்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் கவலையளித்துள்ளது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

உக்ரைனில் ஏறத்தாழ 65 இலட்சம் மக்கள் நாட்டிற்குள்ளேயேயும், 35 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. நிறுவனம் கூறியிருப்பதைக் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, அம்மக்களை வரவேற்கும் நாடுகளில் அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை அரசு-சாரா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2022, 12:39