ஈராக்கில் திறக்கப்படவுள்ள புதிப்பிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களின் ஆக்கிரமிப்பால் 80 விழுக்காடு வரை சேதமாக்கப்பட்ட ஈராக்கின் Mosul நகரில், நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக ஓர் இஸ்லாமிய மசூதியின் கோபுரமும், கிறிஸ்தவ கோவில்களும் வரும் மாதம் திறக்கப்படவுள்ளதாக UNESCO அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக Mosul நகரில் ஐநா.வின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார நிறுவனமான UNESCOவின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் Mosul நகரின் Al Hadba மசூதி கோபுரமும், Al-Saa மற்றும் Al-Tahera கிறிஸ்தவ கோவில்களும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்றார் UNESCO அமைப்பின் உயர் அதிகாரி Ernesto Ottone Ramires
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிவுக்குள்ளாக்கப்பட்ட Mosul நகரின் பாரம்பரியச் சின்னங்களையும், கல்வி, மற்றும் கலாச்சார வாழ்வையும் மீண்டும் உயிர்த்துடிப்புடன் கொணர்ந்து அதனைப் பழைய மகிமைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் UNESCO நிறுவனம் 2018ம் ஆண்டு, கட்டுமான, மற்றும் புதுப்பித்தல் பணிகளைத் துவக்கியது.
Mosul நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களைப் புதுப்பிக்க உதவ, ஐக்கிய அரபு அமீரகம் முதன்முதலில் முன்வந்த வேளையில், 122 சரித்திர புகழ்வாய்ந்த இடங்களையும் புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் நிதிஉதவி வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்