தேடுதல்

16 கார்மேல் சபை மறைசாட்சிகள் 16 கார்மேல் சபை மறைசாட்சிகள்  

16 கார்மேல் சபை மறைசாட்சிகள் 1794ம் ஆண்டில் கொல்லப்பட்டவர்கள்

பிரெஞ்சு புரட்சியின்போது கொல்லப்பட்ட 16 கார்மேல் சபை துறவிகளைப் புனிதர்களாக அறிவிப்பது குறித்த சிறப்பு நடைமுறைகளைத் துவக்குவதற்கு, திருத்தந்தை அனுமதியளித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிரெஞ்சு புரட்சியின்போது கொல்லப்பட்ட 16 கார்மேல் சபை துறவிகளைப் புனிதர்களாக அறிவிப்பது குறித்த சிறப்பு நடைமுறைகளைத் துவக்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதியளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், மற்றும், காலணி அணியாத கார்மேல் சபையினர் (OCD) கேட்டுக்கொண்டதன்பேரில், மறைசாட்சிகளான 16 கார்மேல் சபை துறவிகளைப் புனிதர்களாக அறிவிப்பதற்கு சிறப்பு நடைமுறகைகளைத் தொடங்குமாறு திருத்தந்தை அனுமதியளித்துள்ளார்.

இந்த 16 மறைசாட்சிகளுக்கும், “equipollent canonization” என்ற நடைமுறையைத் துவக்குமாறு திருத்தந்தை அனுமதியளித்துள்ளார். மேலும், இவர்கள் 1906ம் ஆண்டில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள். இவர்களின் திருநாள் ஜூலை மாதம் 17ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

“equipollent canonization” என்பது, வழக்கமான புனிதர்பட்ட நடைமுறையை ஒத்ததாகும், நம்பிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக புனிதர்களாக ஏற்று போற்றிவரும் புண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்களை, திருத்தந்தை, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களைப் புனிதர்களாக அறிவிக்கும் நடைமுறைகளைத் துவக்குவதற்கு அனுமதியளிப்பதாகும்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின்போது, 1794ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதியன்று, கிறிஸ்தவ நம்பிக்கையை மறுதலிக்க மறுத்ததற்காக, ஆழ்நிலை கார்மேல் சபையின் 16 துறவிகள், கில்லட்டின் ஆயுதத்தால் கொல்லப்பட்டனர். மேலும், அப்புரட்சியின்போது குறைந்தது 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2022, 15:47