தேடுதல்

எத்தியோப்பியாவில் போராட்டம் எத்தியோப்பியாவில் போராட்டம்   (AFP or licensors)

எத்தியோப்பியாவில் கைது செய்யப்பட்ட ஏழு அருள்சகோதரிகள் விடுதலை!

Tigray புரட்சியாளர்களின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்ட 7 துறவற அருள்சகோதரிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

எத்தியோப்பியாவில்  Tigray புரட்சியாளர்களின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில்  நவம்பர் மாதம் காவலர்களால் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 7 துறவற அருள்சகோதரிகள், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவின் Tigray சிறுபான்மை இனத்தவரின் அரசுக்கு எதிரானப் போராட்டங்கள் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியதிலிருந்து பலர் கைது செய்யப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி 7 அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டு, தற்போதுதான் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசால் கைது செய்யப்பட்ட, வின்சென்ட் தெ பவுல் பிறரன்பு புதல்வியர் சபையைச் சேர்ந்த ஆறு அருள்சகோதரிகளும், Ursuline துறவு சபையைச் சேர்ந்த ஒருவரும் Tigray  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tigray இனமக்களிலிருந்து கைது செய்யப்பட்ட மேலும் இரு திருத்தொண்டர்கள், இரு அருள்கன்னியர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறித்த எந்தச் செய்தியையும் வெளியிட மறுத்து வருகிறது அரசு.

நவம்பர் மாதம் 5ம் தேதி தலைநகர் Addis Ababaவுக்கு அருகிலுள்ள Gottera பகுதியின் சலேசிய துறவிகள் கல்வி மையத்திலிருந்து கைது செய்யப்பட்ட 17 பேர் பல்வேறு விசாரணைகளுக்குப் பின் நவம்பர் 13ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2022, 15:40