தேடுதல்

மியான்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்களின் போராட்டம் மியான்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்களின் போராட்டம்   (AFP or licensors)

மியான்மாருக்காக செபஉதவிகேட்கும் ACN என்ற பிறரன்பு அமைப்பு

அருள்பணியாளர்கள் மற்றும் போதகர்கள் கைது செய்யப்படும் அதேவேளையில் கையறு நிலையில் இருக்கும் கிறிஸ்தவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்

செல்வராஜ் சூசைமாணிக்கம்

கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி, மியான்மாரில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக இறைவேண்டல் செய்ய, ‘தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு’ அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதியன்று யாங்கூனில் நடைபெற்ற ஆயர் பேரவைக் கூட்டத்தில், "எங்கள் மியான்மார் மக்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடும் இன்றி ஆதரவைப் பெற, உலகளாவிய திருஅவை, மற்றும் நன்கொடையாளர் சமூகத்தின் கூட்டுறவை மியான்மார் ஆயர் பேரவை (CBCM) தொடர்ந்து வேண்டுதல் செய்யும் என்று தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள் என்றும் இவ்வமைப்பு தெரிவிக்கிறது.

இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்துவரும் வழிபாட்டுத்தலங்கள் இராணுவத்தினரால் குறிவைக்கப்படுகின்றன என்று கூறும் இவ்வமைப்பு,   அருள்பணியாளர்கள் மற்றும் போதகர்கள் கைது செய்யப்படும் அதேவேளையில் கையறு நிலையில் இருக்கும்  கிறிஸ்தவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கிறது.

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி, இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி,  நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்தியதோடு, அதன் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற தலைவர்களை சிறையில் அடைத்தது. மேலும் அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏற்பட்ட மாபெரும் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், பாதுகாப்புப் படையினரின் கொடூரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டது. இதனால் ஏறத்தாழ 1,500 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன்,  11,700 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2022, 15:38