தேடுதல்

உரிமைகளுக்காகப் போராடும் ஹோண்டுராஸ் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஹோண்டுராஸ் பெண்கள்  

உரையாடலை ஊக்குவிக்க ஹோண்டுராஸ் ஆயர்கள் வேண்டுகோள்

நேர்மையான உரையாடலுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை செய்வதற்கும் அரசுத் தலைவருக்கு ஹோண்டுராஸ் நாட்டு ஆயர்கள் வேண்டுகோள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம்

தற்போது நீதித் துறையில் எழுந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு ஒன்றைக் கண்டறிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Xiomara Castro மற்றும் தேசிய காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு ஹொண்டுராஸ் ஆயர் பேரவை (CEH),  அழைப்பு விடுத்துள்ளது.

“சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடாது' என்ற தலைப்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹொண்டுராஸ் ஆயர் பேரவையானது, நாட்டில் தனிநபர், குழு, கட்சியினர் என்ற நிலையில் நலன்களை முன்வைக்காமல், மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு செயல்படவும், உரையாடலை ஊக்குவிக்கவும் வேண்டுமென புதிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நவம்பர் 28ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் நிலவிய  அமைதியானச் சூழல், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை மக்களுக்கு  அளித்தபோதிலும், தற்போதைய சூழல் அப்படிப்பட்ட ஒரு நிலையை ஏற்படுத்தாமல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்று கூறியுள்ள ஆயர்கள்,   ஜனவரி 27ம் தேதி, ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர், மற்றும் காங்கிரஸின் தலைவர் பதவிக்கு விரும்பும் இரு குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இடையே விரைவில் நேர்மையான மற்றும் வெளிப்படையான உரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள்,  இதன் மூலம் அவர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவதோடு  மரியாதைக்குரிய ஒரு தீர்வையும் காணமுடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்னர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2022, 15:25