தேடுதல்

Ivory Coast ஆயர்கள் Ivory Coast ஆயர்கள்  

கல்வி வழி புதிய தலைமுறைகளை உருவாக்குவதில் திருஅவை

உறுதியான அடித்தளத்தில் வடிவமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் திட்டம் எமக்குத் தேவைப்படுகிறது : Ivory Coast ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஐவரி கோஸ்ட்டின் (Ivory Coast) ஆயர்கள், 120வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் ஒன்றுகூடி உலகளாவிய கல்வித் திட்டத்தின் கட்டமைப்பிற்குள், “இளையோரை உருவாக்குவதில் திருஅவையின் பங்களிப்பு” என்ற தலைப்பில் விவாதித்து வருவதாக Fides செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

"எங்களுக்கு மிகவும் அவசரமான சவாலாகத் தோன்றுவதில் வெற்றிபெற, கல்வி என்பது இன்றியமையாத வழிமுறையாக அமைந்துள்ளது என்று Fides செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்த Korhogo உயர்மறைமாவட்டப் பேராயரும், ஐவரி கோஸ்ட் (Ivory Coast) ஆயர் பேரவையின் தலைவருமான Ignace Bessi Dogbo அவர்கள், இதற்காக நன்கு சிந்திக்கப்பட்டு, உறுதியான அடித்தளத்தில் வடிவமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் திட்டம் எமக்குத் தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.  

பல்வேறு மறைமாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களின்போது, ​​புதிய தலைமுறைகளை உருவாக்குவதன் வழியாக, நாட்டின் புதுப்பித்தலுக்கு பங்களிக்கக்கூடிய ஒரு கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது சம்மந்தமாக பெறப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், ஐவரி கோஸ்ட் ஆயர்கள் ஒன்றுகூடி பல மாதங்களாகப் பணியாற்றி வருகின்றனர் என்றும் பேராயர் தெரிவித்தார்.  

ஒரு முன்மாதிரியான சமுதாயத்தைக் கட்டமைக்கவேண்டும் என்பதிலும், முழு மனிதனையும் உள்ளடக்கிய  நல்ல கல்வியை அடைவதற்கான ஆழமான வழிமுறைகளைத் தேடுவதிலும் நாங்கள் தேர்வுசெய்துள்ள கல்வியின் மையப்பொருள் எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது என்றும் பேராயர் Bessi Dogbo தெரிவித்தார்.

ஜனவரி 30, வரும் ஞாயிறு வரையிலும் நடைபெறும் ஆயர் பேரவையின் இந்தக் கூட்டமானது, நற்கருணைக் கொண்டாடட்டத்துடன் நிறைவடையும் என்றும் பேராயர் தெரிவித்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2022, 16:11