இந்து அடிப்படைவாதத்திற்கு எதிராக, டில்லியில் இளையோரின் போராட்டம் இந்து அடிப்படைவாதத்திற்கு எதிராக, டில்லியில் இளையோரின் போராட்டம் 

மீண்டும் இரு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

நவம்பர் 7ம் தேதி ஞாயிறன்று, கர்நாடகா, மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் செபக்கூட்டங்களில் அத்துமீறி நுழைந்த மத தீவிரப்போக்குடையோர், தாக்குதல்களை நடத்தியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக, நவம்பர் 7ம் தேதி, கடந்த ஞாயிறன்றும், கர்நாடகா, மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில், செபக்கூட்டங்களில் அத்துமீறி நுழைந்த மத தீவிரப்போக்குடையோர், தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கர்நாடகாவின் Belgavi  மாவட்டத்தில் Maratha Colony எனும் நகரில் செபக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமையன்று கூடி செபித்துக்கொண்டிருந்த மக்களை, மதமாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுடன் உள்ளேயே அடைத்துவைத்து, காவல்துறையை அழைத்துள்ளது ஸ்ரீ இராம சேனா என்ற அமைப்பு.

செபக்கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்த இந்து தேசியவாதக் குழுவினர், செபித்துக் கொண்டிருந்த மக்களை அடைத்து வைத்து காவல்துறையை அழைத்ததைத் தொடர்ந்து, அங்குவந்த காவல்துறையினர், செபித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

அதே நாளில், சட்டீஸ்கர் மாநிலத்தின் Bhilai மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் செபக்கூடத்தில் செபித்துக்கொண்டிருந்த பெண்களைத் தாக்கி, அச்செபக்கூடத்தின் உள்ளேயிருந்த பொருட்களை சேதமாக்கியுள்ளனர், மத தீவிரவாதிகள். (ASIA NEWS)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2021, 15:18