புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் முகப்புத் தோற்றம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் முகப்புத் தோற்றம் 

உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் பகுதி 1

ஐரோப்பாவில் மிகப் பழமையான ஆலயமாக விளங்கும் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில், உரோம் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமுமாகும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில், உரோம் நகரில் அமைந்துள்ள நான்கு முக்கிய பெருங்கோவில்களில் ஒன்று. இது, நான்காம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசர் Constantine அவர்கள் கிறிஸ்தவராக மாறி, திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களிடம், அவர் திருமுழுக்குப் பெற்ற இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. இது, 897ம் ஆண்டில் நிலநடுக்கத்தாலும், 1307 மற்றும், 1361ம் ஆண்டுகளில் தீ விபத்துக்களாலும் சேதமடைந்து, மீண்டும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிகப் பழமையான ஆலயமாக விளங்கும் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில், உரோம் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமுமாகும். இது, உரோம் மறைமாவட்டத்தின் ஆயரும், கத்தோலிக்கத் திருஅவையின் தனிப்பெரும் தலைவருமாகிய திருத்தந்தைக்குரிய பேராலயமாக அமைந்திருப்பதால், உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம், தாய் ஆலயமாகவும் கருதப்பட்டு வருகிறது. இதனாலேயே, திருஅவையில் இந்த பெருங்கோவிலின் நேர்ந்தளிப்பு நாள், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 9ம் தேதி விழாவாகச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய தனிச்சிறப்புமிக்க உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் பற்றி, அருள்பணி அருள் ஜான் போஸ்கோ அவர்கள் இன்றைய நம் நிகழ்ச்சியில் நமக்குக் காட்சிப்படுத்துகிறார். வேலூர் மறைமாவட்டத்தின் அருள்பணி போஸ்கோ அவர்கள், இப்பெருங்கோவிலில் கற்பனையாக அழைத்துச் செல்லும் இடங்களுக்கு நாமும் செல்வோம்.

நேர்காணல்: உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் பகுதி 1

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2021, 14:32